Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி விண்ணபிக்க கலெக்டர் அழைப்பு

அரியலூர், ஜூன் 25: அரியலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது. தொடர்ந்து, தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் இணைந்து நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற 18 முதல் 35 வயதிற்குள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினராகவும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை மாவட்டத்தில் நான்கு மாத கால அளவு நடைபெறவுள்ளது.