Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னம் அருகே வெள்ளாற்றில் மணல் திருட்டு

குன்னம், ஜுன் 25: குன்னம் அருகே வெள்ளாற்றில் மணல்களை திருடி அப்பகுதி பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் பகுதியில் தொடர் ஆற்று மணல் அரசு அனுமதி இன்றி திருட்டு துங்கபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. இவர்கள் வீட்டு வேலைக்கு அரசு உத்தரவுபடி எம் சாண்ட் பயன்படுத்தாமல் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் அருகில் உள்ள சின்னாறு மற்றும் வெள்ளாற்றில் டயர் வண்டிகளில் மணலை திருடி வீட்டில் சேமித்து வீடு கட்டி வருகின்றனர். இதுகுறித்து அந்தப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குன்னம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தும். அதிகாரிகள் அலைச்சியமாக இருக்கின்றனர். இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.