Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அமைச்சர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அமைச்சர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், கலெக்டர் ஷரண்யா அறி முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து, அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஒரு திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டையும் செலவினங்களையும் வெறும் காகித அளவிலும் எண்களாகவும் மட்டுமே அணுகாமல், அத்திட்டத்தின் மூலம் களத்தில் ஏற்பட்ட உண்மையான தாக்கம் என்ன என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.