Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி கோயிலில் தேரோட்ட விழா கோலாகலம்: பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர், மே 25: பெரம்பலூர் துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பலூர் துறைமங்கலம் புது நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் உற்சவ அம்மன் ரிசப, மயில் வாகனம், அன்னப்பட்சி உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை உற்சவ அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்களான ராஜராஜேஸ்வரி அம்மன், விநாயகர், முருகப்பெருமானுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.