Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசு தின விழாவில் மாநில விருது விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், மே 22: சாதனை புரிந்தவர்கள் குடியரசு தினவிழாவில் மாநில அளவில் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 2027ம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த்தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2027ம் நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 31.07.2026-க்குள் இணையதளம் https://awards.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.