Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் இயங்கி வரும் 43 தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தம்

பெரம்பலூர், மே 22: பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேருந்து உரிமையாளர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியிடம் உறுதி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில், மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தனியார் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து மாவட்ட எஸ்பி பிரபாகர் எடுத்துரைத்தார்.