Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தினமும் மாலையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான்

பெரம்பலூர், ஆக. 21: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் டெக்னோவா 26 - தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்து ஹேக்கத்தானை தொடங்கி வைத்தார். “நிலையான சமூகத்திற்கான தொழில்நுட்பம்: சிறந்த எதிர்காலத்திற்கான சிக்கனமான புதுமைகள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய இரு நாள்களில் நடைபெறும் இந்நிகழ்வில், மாணவர்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கான குறைந்த செலவிலான, நடைமுறைக்கு ஏற்ற தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குகின்றனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து வேந்தர் அவர்கள் பேசியதாவது:

இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், டேட்டா சயின்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது புதிய சாதனங்களையும் மென்பொருட்களையும் உருவாக்குவதுடன் முடிவடையக் கூடாது. அந்தத் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு அளிக்கிறது, குறைந்த செலவில் எத்தனை மக்களுக்கு பயன்படுகிறது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதுதான் முக்கியம்.

இந்த நோக்கத்தில்தான் டெக்னோவா 26 நிகழ்வின் கருப்பொருளாக “நிலையான சமூகத்திற்கான தொழில்நுட்பம்: சிறந்த எதிர்காலத்திற்கான சிக்கனமான புதுமைகள்” தேர்வு செய்யப்பட்டுள்ளது.“சிக்கனமான புதுமை என்பது ஒரு சிந்தனை முறை”. சிக்கனமான புதுமை என்பது குறைந்த விலையில் ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல. குறைந்த வளங்களைப் பயன்படுத்தி, அதிகமான மக்களுக்கு அதிக பயனை வழங்கக்கூடிய தீர்வை உருவாக்குவதே உண்மையான சிக்கனமான புதுமையாகும். ஒரு விவசாயியின் பிரச்சினைக்கு குறைந்த செலவில் தீர்வு வழங்கும் தொழில்நுட்பம், ஒரு கிராமத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் அமைப்பு, மின்சாரத்தைச் சேமிக்கும் தொழில்நுட்பம், கழிவுகளை குறைக்கும் தீர்வு அல்லது பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் என சமூகத்திற்கு நேரடியாகப் பயன்படும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமான புதுமையாகும்.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 250 பேர் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்றுள்ளனர்.சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன், தமிழகத்திற்கு வெளியேயுள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

விவசாயம், நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்,

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தங்களது திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். குறைந்த வளங்களைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குவது இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக உள்ளது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எச்.ஆர்.டி.சி. டீன் சரவணராஜ் ஹேக்கத்தானின் நடைமுறை நிகழ்வுகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

கவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். படியுங்கள் வேந்தர் தொடங்கி வைத்தார்