Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடக்கம்; போலீசார் லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்க புதிய செல்போன் நம்பர் தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும்; மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் \”ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு\” தொடங்கப்பட்டுள்ளது. எனவே தொலைபேசி, வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில், காவல்துறையில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்பது, லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்துவது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.

பெரம்பலூர் பொதுமக்களிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்தினாலோ, பொது மக்கள் அதுகுறித்த தகவல்களை 8903631122 என்ற எண்ணிற்கு தொலைப் பேசி அல்லது வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் போது, சம்பவம் நடைபெற்ற இடம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் விவரம், லஞ்சம் கேட்கப்பட்ட காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான பிற தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில், தகவல் அளிப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெறப்படும் தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காவல் துறையில் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. காவல்துறையினர் தங்களது பணியைச் செய்வதற்காக எந்தவிதமான லஞ்சத்தையும் கேட்கக் கூடாது என்பதையும், லஞ்சம் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் தயக்கமின்றி, அச்சமின்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது. “லஞ்சம்கொடுக்காதீர், லஞ்சம் கேட்பதை தைரியமாக தெரிவியுங்கள்\” ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.