Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஞாயிறு தோறும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு: இணையத்தில் விடைத்தாள் நகலினை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம்

பெரம்பலூர், ஆக. 20: ஜூலையில் நடந்த 10ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் ஒளி நகலினை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுக்கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜூலை மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, நோட்டிவிகேஷனை-ஐ கிளிக் செய்து SSLC Examinations என்பதை கிளிக் செய்தவுடன் SSLC JULY-2026 - Answer Script Scanned Copy Download- என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள்களின் ஒளி நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத் தாள்களின் ஒளி நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் - Application for Retotalling/Revaluation- என்ற தலைப்பினை கிளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.தேர்வர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தினை இரு நகல்கள் எடுத்து, பூர்த்தி செய்து, இன்று (20ம் தேதி) வியாழக்கிழமை மற்றும் நாளை (21ம் தேதி) வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில், இடதுபுறம் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையைப் பணமாகச் செலுத்த வேண்டும். அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.மறுமதிப்பீடு செய்ய பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505ம், மறுக்கூட்டல் செய்ய பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.205ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் தேர்வுகளில், மொத்த மதிப்பெண்களில் ஏதேனும் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அதுவே இறுதி மதிப்பெண்கள் ஆகும். எனவே தேர்வர்கள் தங்களது விடைத்தாளினை சம்பந்தப் பட்ட பாடஆசிரியர்களிடம் வழங்கி, அதனை ஒப்பிட்ட பின், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 9498383075, 9498383076 என்ற செல்போன் எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.