Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் 6 நீரேற்று உந்து நிலையங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்: உதவி செயற் பொறியாளர்கள் அறிவிப்பு

பெரம்பலூர், ஜூலை.20: சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய 3- துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் 57 கிராமங்களில், 6 நீரேற்று உந்து நிலையங்களில் மின் நிறுத்தம். உதவி செயற் பொறியாளர்கள் ரவிக்குமார், பொன் சங்கர், மாணிக்கம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மூவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி முதல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், பராமரிப்பு பணிகள் முடியும் வரை சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல் பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜய கோபால புரம், செல்லியம் பாளையம், புது நடுவலூர், ரெங்கநாத புரம், செஞ்சேரி, தம்பிரான் பட்டி, மலையப்ப நகர் ஆகிய 19 கிராமங்கள் மற்றும் செட்டிக்குளம், நாரண மங்களம், அயிலூர் ஆகிய 3 நீரேற்றும் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெற இருப்பதால், எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோனேரி பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டா புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே. புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய 17 கிராமங்கள் மற்றும் காவேரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய 3 பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் நேரம் வரை, மின்விநியோகம் இருக்காது என எசனை துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் பொன் சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் நேரம் வரை, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார்பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர், தொண்டமாந்துறை, விசுவக் குடி ஆகிய 21 கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற் பொறியாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை சிறுவாச்சூர், கிருஷ்ணாபுரம், எசனை ஆகிய 3 துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட 57 கிராமங்களிலும், 6 நீரேற்று உந்து நிலையங்களிலும் மின் விநியோகம் இருக்காது.