Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வு முடிவுகளை வாட்ஸ் அப் செயலியில் தெரிந்து கொள்ளலாம்

பெரம்பலூர்,மே 20: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: 2026- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது.