Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை

பெரம்பலூர், ஆக.18: பெரம்பலூர்அருகே பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு முதல் குழந்தை ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவமாக பிறந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, காரியானூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி நிஷா. இந்நிலையில் நிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மதியம் நிஷாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்சில் நிஷாவை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸை பைலட் அழகுவேல் ஓட்டினார். வாகனத்தில் (எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன்) மருத்துவ உதவியாளர் சங்கவி உடனிருந்தார். வி.களத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பிரசவ வலி அதிகமானதால் மாலை 4:12மணிக்கு மருத்துவ உதவியாளர் சங்கவி உதவியுடன், நிஷாவுக்கு ஆம்புலன்ஸ் உள்ளேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் இருவரையும் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு பத்திரமாகக் கொண்டு வந்து பிரசவ வார்டு பகுதியில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து நிஷா, லோக நாதன் தம்பதியினர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலென்ஸ் மருத்துவ உதவியாளர் சங்கவி மற்றும் பைலட் அழகுவேல் ஆகிய இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.