Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சூறை காற்றுக்கு மின்கம்பி அறுந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்

பெரம்பலூர்,ஜூன்18: சூறைக் காற்றுக்கு மின்பாதையில் மின்கம்பி அறுந்துகிடந்தால், பொதுமக்கள் அதனைத் தொடாமல் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் மேகலா உத்தரவு. இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில், பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் மின்சார வாரியம் தெரிவிக்கின்ற நெறிமுறைகளைக் கடை பிடித்து, மின் விபத்துகளையும், அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.