Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்டம் சரவணாபுரம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கம்

பெரம்பலூர்,ஜூன் 18: அரசு பேருந்து வசதி இல்லாத சரவணாபுரம் கிராமத்தில் மாணவர்கள் அவதிப்பட்டனர். தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேருந்து இயக்கினர்.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சரவணபுபுரம் கிராமம். பச்சைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தை ஒட்டித்தான் பெரம்பலூர் மாவட்டத்தின் 2-வது மிகப்பெரிய லாடபுரம் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த கிராமத்திலிருந்து தினமும் 20 மாணவ மாணவியர் லாடபுரம் அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகளுக்கும், அம்மா பாளையம் மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஒன்றிரண்டு பேர் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர். இவர்கள் தவிர சம்பங்கி பூ சாகுபடியாளர்கள் சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், மாவட்ட, வட்ட தலைநகரான பெரம்பலூருக்கு வேலைக்குச் செல்வோர், மருத்துவ வசதிக் காக செல்வோர் தினமும் இந்த கிராமத்திலிருந்து குறைந்தது 50க்கும் மேற்பட்டோர் வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.