ஜெயங்கொண்டம், ஆக. 17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு உலக நன்மை வேண்டி , மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கும்பகோணத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த (சேட்டு) மார்வாடிகள். கும்பகோணம் மாமகம் குளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை கங்கை, காவிரி, சரஸ்வதி ஆகிய நதிகள் மற்றும் மகாமகம் தீர்த்த நீரை பாதயாத்திரையாக எடுத்து வந்தனர். காலை கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்பகுதியில் அமர்ந்து யாத்திரையாக எடுத்துவரப்பட்ட நீரை கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
ஆனால் எந்தவித அனுமதியும் வாங்காத நிலையில் நீரை அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை எனக் கூறி நீரினை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் பால் அபிஷேகத்திற்காக பாலை மட்டும் வழங்கினர். கோவிலில் நடைபெற்ற அபிஷேகங்களை கண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். இதில் அவர்கள் குடும்பமாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



