Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பதிவு, புதுப்பிக்க அழைப்பு; எந்தவித கட்டணமும் இல்லை

பெரம்பலூர்,ஆக.17: பெரம்பலூரில் வேலை வாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை போன்ற பதிவுகள் செய்யும் பணிகள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் நடைபெறுகிறது என மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப் படுகிறது.

மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி, தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாறவேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.