Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு

ஜெயங்கொண்டம், ஆக. 17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்ன வளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பா தலைமை தாங்கினார். முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும் சின்ன வளையம் 6வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான செல்வராஜ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுதாகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா, மற்றும் துணைத் தலைவர் பள்ளி வளர்ச்சி குழு மற்றும் ஊர் முக்கியஸ்தர்களான நாட்டார் செல்வராஜ், அப்பர், விஸ்வநாதன் சின்னப்பிள்ளை மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் ராமதாஸ் மற்றும் பலர் முன்னிலை வகித்து வாழ்த்துரையும் வழங்கினர்.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கடந்த 2025-26ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த கீர்த்தனா, பாவனா, செல்வமணி ஆகிய மாணவர்களுக்கு 2005-2006ம் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள் சார்பில் மிதிவண்டியை பரிசாக வழங்கப்பட்டது.