Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம், ஜூலை 17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் டெங்கு எதிர்ப்பு மாத பேரணி நடைபெற்றது. டெங்கு நோய் பரவல், மற்றும் கட்டுப்படுத்துதல் சம்பந்தமான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி, வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சீனிவாசன் பேரணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாபு, களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முத்து பிரபாகரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், தம்பிசிவம், மணிகண்டன், வினோத் ,சுரேஷ், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மேற்பார்வையாளர்கள் பாலகுமாரன், ஜோதி ,ரேகா , கலையரசி, உமாதேவி, கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர் பேரணி நகராட்சி அலுவலகத்தில் ஆரம்பித்து விருதாச்சலம் ரோடு ,நான்கு ரோடு சந்திப்பு ,கடைவீதி, மேட்டு தெரு, அண்ணா சிலை அருகில் பேரணி முடிவுற்றது.