Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் பலாப்பழம் விற்பனை படுஜோர்

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலை போல் குவித்து வைத்து பலாப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோ ரூ. 25 விற்கப்படும் பலாப்பழங்கள் சாதாரணமாக ஒரு பழம் 6 கிலோ எடைக்கு குறைவின்றி உள்ளதால் ரூ. 150 முதல் ரூ. 300 வரை விற்பனை படுஞ்ஜேராக நடந்து வருகிறது. பெரம்பலூர் சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, அரியலூர் சாலை போன்ற இடங்களில் சாலை ஓரங்களில் மலைபோல் குவித்து வைத்து விற்கப்படுகிறது.

அதேபோல் சிறுவாச்சூர், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம், கை.களத்தூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்களில் வைத்தும், சாலையோரம் குவித்து வைத்தும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவாக கிடைப்பதால் பொதுமக்கள் முழுபழம் வாங்கி செல்கின்றனர்.