Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

களமிறங்கிய கலெக்டர், எம்எல்ஏ பணி நிரந்தரம் செய்ய கோரி பெரம்பலூர்-அரியலூர் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

பெரம்பலூர், ஆக. 14: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில், புறவழிச்சாலை அருகே இயங்கி வரும் பெரம்பலூர்- அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான டாஸ்மாக் அலுவலகம் முன்பு நேற்று பெரம்பலூர்- அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். அனைத்துப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கப் படும் நிலையை உறுதி செய்ய வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் நிலுவைதொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியாளர்கள் நலன்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவுகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.குமார் தலைமை வகித்தார்.

தோமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி, அரியலூர் மாவட்ட தொமுச டாஸ்மாக் மாவட்டச்செயலாளர் சங்கர், தலைவர் சுந்தர்ராஜ், பொருளாளர் கொளஞ்சி, பெரம்பலூர் மாவட்ட தொமுச டாஸ்மாக் மாவட்டச்செயலாளர் மதி, தலைவர் கலியமூர்த்தி, பொருளாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் 15பேர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.