Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

‘குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்’ திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவு தூய்மை பணி

பெரம்பலூர், ஆக.14: சிறுவாச்சூர் தெப்பக்குளத்தில் பெருமளவு தூய்மைப் பணியை மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஊராட்சியில் சுதந்திர தினைத்தை முன்னிட்டு “குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்” என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், (MASS CLEANING) பெருமளவு தூய்மைப் பணியை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்” என்ற முன்னெடுப்பின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தன்னார்வலர்கள், நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பணியாளர்கள், நேரு யுவகேந்திரா அமைப்பு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்களை கொண்டு பெருமளவு துப்புறவு பணி மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமியப்பா நகர், பெருமாள் கோவில், வெங்கடேசபுரம் வடக்கு மகளிர் விடுதி அருகில், வடக்குமாதவி ரோடு உழவர் சந்தை அருகில், ஆலம்பாடி ரோடு அருகில், வெங்கடேச புரம் கோல்டன் கேட்ஸ் பள்ளி பின்புறம், திருச்சி பிரதான சாலை பேருந்து பணிமனை அருகில் ஆகிய இடங்களிலும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் குளம், நான்கு ரோடுமுதல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை (கறிவிருந்து உணவகம் அருகில்), வேப்பந்தட்டை வடக்கு பெட்ரோல் பங்க் அருகில், வ.களத்தூர் அகரம் கிராமம் செல்லும் வழி, செட்டிக்குளம் டாஸ்மாக் கடை அருகில், பாடாலூர் காவல் நிலையம் எதிரில், அகரம்சீகூர் ஊராட்சி வெள்ளாறு பாலம் கீழ் பகுதி, குன்னம் அரியலூர் செல்லும் சாலை ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டு பெருமளவு தூய்மை பணிகள் கல்லூரி மாணவர்கள், நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள் இணைந்து இந்த மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாதந்தோறும் இந்த மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. இந்தத் தூய்மைப் பணியின் போது, மாவட்டக் கலெக்டரே நேரடியாகத் களத்தில் இறங்கி, பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளைச் சுத்தம் செய்து, தூய்மையே நாட்டின் பெருமை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுத்தினார். தூய்மையின்போது சேகரிக் கப்படும் நெகிழி உள்ளிட்ட கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம்பிரித்து சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயராமன் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.