Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலை ரூ.10,169, எள் ரூ.12,232 க்கு விற்பனை

ஜெயங்கொண்டம், ஜூன் 14: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கடலை, எள் போன்றவை அதிகபட்ச விலையில் கொள்முதல் செய்யப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலை. எள். சோளம். பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயறு வகை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றில் நேற்று 80 கிலோ கொண்ட கடலை மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.10,169 ம் குறைந்தபட்ச விலையாக ரூ.7,511க்கும், சராசரி விலையாக 9,932க்கும், 80 கிலோ கொண்ட எள் மூட்டை ஒன்று ரூ.12,232க்கு அதிகபட்ச விலையாகவும், குறைந்தபட்ச விலையாக ரூ.8,002 க்கும் சராசரி விலையாக ரூ.10,969க்கும் கொள்முதல் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டன. நேற்று கடலை 400 மூட்டைகளையும், எள்ளு 125 மூட்டைகளையும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.