Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; பெரம்பலூரில் 17ம்தேதி தொடங்குகிறது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 தகவல்கள் கேட்டு பெறப்படும்

பெரம்பலூர், ஜூலை 13: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வீடு தேடி வருவோரிடம் 33 தகவல்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். சுய கணக்கெடுப்பு வருகிற 17ம்தேதி தொடங்குகிறது. கணக்கெடுப்போர்களுக்கான 2ம்கட்ட 3 நாள் பயிற்சி இன்று (13ம்தேதி) தொடங்குகிறது என்று கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கும், ஒரு கிராமத்தின் வளர்ச்சி பணிகளுக்கும் அடிப்படையாக வைத்து மக்கள் தொகை கொண்டும், ஒரு குடும்பத்தின் அடிப்படை வசதிகளை கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027ம் ஆண்டிற்கான பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வீடுதோறும் களப்பணிகள் நடைபெறவுள்ளது. வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு அனைத்து பொதுமக்களும் உரிய முழுஒத்துழைப்பும் கணக்கெடுப்பிற்குத் தேவையான விவரங்களை வழங்கி பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவிடுமாறு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வரும்பொழுது கட்டிட எண், வீட்டு எண், வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டுக் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலைமை, குடும்ப எண், வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை, குடும்ப தலைவரின் பெயர், குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவர் எஸ்சி, எஸ்டி, மற்ற பிரிவைச் சேர்ந்தவரா, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிப்பிட வசதியின் வகை, கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் எல்பிஜி/ பிஎன்ஜி இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப் படும் பிரதான எரிபொருள், வானொலி/ ட்ரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி/ கணினி, தொலைபேசி/ கைப்பேசி/ ஸ்மார்ட் போன், மிதிவண்டி/ ஸ்கூட்டர்/ மோட்டார் சைக்கிள்/ மொபைல், கார்/ ஜீப்/ வேன், குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம், செல்போன் நம்பர் ஆகிய 33 கேள்விகளுக்கு வீட்டில் உள்ளோர் புள்ளி விவரங்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

இந்த பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடைபெற இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) பணிகளை அதாவது தனிநபர் மூலமாக http://census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் குடும்ப விவரத்தை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்து, அதன் பதிவு எண்ணை மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் களப்பணியாளர் தங்கள் வீடு தேடி வரும்போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், லெப்பைக் குடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய 4 பேரூராட்சிகள், 121 ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 894 தெருக்களில் ஆகஸ்ட் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 915 களப்பணியாளர்கள், 154 சூப்பர்வைசர்கள் என மொத்தம் 1069 பேர்களுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், 4 தாலுக்கா அளவில், பூலாம்பாடி பேரூராட்சி என 7 இடங்களில் முதல்கட்டமாக சுமார் 300 பேர்களுக்கு கடந்த 8,9,10 தேதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(13ம்தேதி) தொடங்கி, 14, 15 என 3 நாட்களுக்கு சுமார் 700 பேர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. பின்னர் மீதமுள்ள நபர்களுக்கு 3ம் கட்டப் பயிற்சி நடைபெறவுள்ளது. 3 நாள் பயிற்சி முடிவடைந்த உடன் களப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் மாதிரி கணக்கெடுக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.