Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு; அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஏரிக்கரை முட்புதர்களை அகற்றிய விவசாயிகள்

பெரம்பலூர், ஆக.12: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பெரம்பலூர்  வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரிக்கரை மீதுள்ள முட்புதர்களை விவசாயிகளே அகற்றினர். பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையின் கீழ்புறம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு ஏரியின் கரைதான் நடைபாதையாக உள்ளது. தினமும் இந்த வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி கரையின் மீது நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு நடந்தும், வண்டி மாடுகளை ஓட்டிக்கொண்டும், வேளாண் விளை பொருட்கள், உரங்கள் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்துக்களை எடுத்துச் சென்று வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரி கரைகளின் இருபுறமும் கருவேல முட்கள் பாதையை ஆக்கிரமித்து அடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்து விட்டது. இதனால், விவசாயிகள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், வேலைக்கு செல்லும் ஆட்கள் பெரிதும் அவதியுற்றனர்.

இந்த முட்புதர்களை அகற்றித் தரும்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை பயனளிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் சொந்த செலவிலேயே ஜேசிபி எந்திரம், கூலி ஆட்களைக் கொண்டு இரு புறமும் இருந்த முட்களை அகற்றியதால் போக்குவரத்திற்கு இடையூறு குறைந்துள்ளது. முட்புதர்களை அகற்றிய விவசாயிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

கடந்த ஒரு வருடமாக இந்த வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரிக்கரைகளின் இருபுறமும் கருவேல முட்கள் பாதையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்தது. இதனால், விவசாயிகள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், வேலைக்கு செல்லும் ஆட்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.