Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

80-வது சுதந்திரதின விழா பட்டாலியன் படைப்பிரிவினர் அணிவகுப்பு ஒத்திகை

பெரம்பலூர், ஆக. 12: நாட்டின் 80-வது சுதந்திரதின விழாவையொட்டி பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் 3 பட்டாலியன் படைப்பிரிவினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியத் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 15ஆம்தேதி சனிக் கிழமை காலை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் சமாதானத்தின் அடையாளமாக வெள்ளை புறாக்களையும், வண்ண வண்ண பலூன்களையும் பறக்கவிட்டு, காவல்துறை சார்பாக நடைபெறும் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின்னர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பத்தாரை கௌரவித்து, பல்வேறு துறைகளின் சார்பாக நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணி புரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்குகிறார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்த விழாவில் முத்தாய்ப்பாக நடைபெறும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதைக்காக, நேற்று காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில், பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் (பொ) சுரேஷ், பெரம்பலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் (பொ) மகேஷ் மேற்பார்வையில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில், 1-இன்ஸ்பெக்டர் முன்னிலையில், 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் தலைமையில், தலா 23 போலீசார் கொண்ட ஒரு பட்டாலியன் என 3 பட்டாலியன் படைப்பிரிவினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சுதந்திர தினவிழா அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழா அணி வகுப்பு மரியாதையில் இன்ஸ் பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர்கள், 3பட்டாலியன் போலீசார் என 73 பேர்கள் மட்டுமன்றி ஊர்க் காவல் படையினரும், என்சிசி மாணவர்களும் இணைந்து பங்கேற்கவுள்ளனர்.