Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் செயல்படாத 314 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள்

அரியலூர், ஆக. 10: அரியலூர் மாவட்டம் செயல்படாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சின்னம் பதிவேற்றும் அலகுகள் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களுரு பாரத மின்னணு லிட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள செயல்படாத (Non Functional Units) 29 வாக்குச்சீட்டு அலகுகள், 184 கட்டுப்பாட்டு அலகுகள், 101 வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் என மொத்தம் 314 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 4 சின்னம் பதிவேற்றும் அலகுகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரத்திலிருந்து பெங்களுரு பாரத மின்னணு லிட் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.