பெரம்பலூர், ஆக. 10: பெரம்பலூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, விரைவில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி, பெரம்பலூர் மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதியக் கண்டு பிடிப்புகள் தொடர்பாக நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமர் தலைமை வகித்தார். முன்னதாக ரம்யா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்புசார் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிமுகவுரை பேசினார். டாக்டர் கருணாகரன் வாழ்த்துரை வழங்கினார்.



