Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அரியலூர், ஜூலை 10: தவெக தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் கீழப்பழுவூர் பேருந்து நிறுத்துமிடத்தில் திரண்ட கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ஜெகநாதன், சங்க ஒருங்கிணைப்பாளர் வேட்டைக்குடி ஜெயகதீசன், கீழப்பழுவூர் சேகர், கள்ளூர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாக முழக்கமிட்டவாறு கீழப்பழுவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வரை சென்றனர். பின்னர் அங்கு தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கூட்டுறவு சங்கச் செயலர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.