Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆலம்பாடி அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஆக. 8: ஆலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த விழிப்புணர்வுப் பேரணி பள்ளியில் தொடங்கி நான்கு ரோடு வழியாக ரேஷன் கடை, பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், அரச மரம் பேருந்து நிறுத்தம் வழியாக அனைத்து தெருக்களிலும் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்தனர். பேரணியில் போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்று நோயை உருவாக்கும், வேண்டாம், வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என முழக்கமிட்டனர். ஆசிரியர்கள் விஜய லெட்சுமி, இராமதாசு, செல்வ ராணி பிரகாஷ், பாலகணேஷ் அதியமான், பணியாளர்கள் சாந்தி, மெகருனிஷா, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் அனைவரும் பேரணியில் பங்கேற்றனர்.