பெரம்பலூர், ஆக. 8: பெரம்பலூர் சிவன்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவிலில், நேற்றுவெள்ளிக்கிழமை ஆடி மாதக் கிருத்திகையை முன்னிட்டு காலை தனி சன்னதியில் உள்ள வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு உற்சவர், மற்றும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதன்படி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன். சிறப்பு அபிஷேகம் முடித்து, முருகப்பெருமானுக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளிவேல் சாற்றி மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், வரதராஜ பூபதி மற்றும் தின, வார வழிபாட்டு சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு முருகன் பக்திப் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர்(பொ) அசனாம்பிகை செய்திருந்தார்.
+
Advertisement




