பெரம்பலூர், ஆக. 8: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை நாளைமறுநாள் முதல் இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குனர் கல்பனாத் ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : வருகிற 17-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரைதனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுத் துறையின் சேவை மையங்களில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், நாளை மறுநாள் முதல் www.dge.tn.gov.in http://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



