Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனின் சான்றிதழை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுதந்த நீதிபதி

பெரம்பலூர்,ஆக.7: படிப்பை தொடர முடியாத மாணவனின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடமிருந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பெற்று தந்துள்ளார். பெரம்பலூர் நகராட்சி, திருநகர் பகுதியைச் சேர்ந்த அபுதாலிப் மகன் முகமது ஷஜீர் என்பவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மாணவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதனால் மாணவரின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்லூரி சான்றிதழ்களைப் பெற முடியாமல் அவதிப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தனது சான்றிதழ்கள் கிடைக்க உதவுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தார். அவரது மனுவை விசாரணை செய்த பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (பொ) தலைவரும், மாவட்டமுதன்மை அமர்வு நீதிபதியுமாகிய சத்தியமூர்த்தி உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டது.