Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

அரியலூர். ஆக. 7: அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சிப் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மிருணாளினி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் “தாய்ப்பாலூட்டுதல் வளங்குன்றா வாழ்க்கையின் ஆரம்பம், தாய்ப்பாலூட்ட ஆதரவளிக்கும் அமைப்புகளை பலப்படுத்துவோம்” என்ற கருப்பொருளை மையமாககொண்டு 2026-ஆம் ஆண்டிற்கான உலக தாய்ப்பாலூட்டல் வார விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு தாய்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.