Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான பீச்-வாலிபால் விளையாட்டு போட்டி

பெரம்பலூர்,ஆக.7: பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பீச்-வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான பீச்- வாலிபால் விளையாட்டுப் போட்டி நேற்று (6ஆம்தேதி) நடைபெற்றது.

14 வயதிற்கு உட்பட்டோருக்கு, 17 வயதிற்கு உட்பட்டோருக்கு, 19 வயதுக்கு உட்பட்டவருக்கு என மூன்று பிரிவுகளில் மாணவர்களுக்கு தனியாக மாணவிகளுக்கு தனியாக நடத்தப்பட்ட இந்த பீச்- வாலிபால் விளையாட்டுப் போட்டிகளை, பெரம்பலூர் மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் கணேசன் தொடங்கி வைத்தார். பெரம்பலூர்குறுவட்ட அளவில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பீச் வாலிபால் அணி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த உடற் கல்வி இயக்குனர்கள் உடற் கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை முன்னின்று நடத்தினர்.