Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு அனுமதியின்றி எடையூர் பிரிவு சாலையில் கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்

பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அரசு அனுமதியின்றி உடை கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் விஜயகுமாரன் தகவல் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கனிமம்) ஆகியோர் நேற்று பெரம்பலூர்-அரியலூர்சாலை கல்பாடி எறையூர் பிரிவு சாலை அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியை கடந்து செல்ல வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு உரிய அனுமதியில்லாமல் உடை கற்கள் ஏற்றிவந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில் 6 யூனிட் உடை கற்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.6000 ஆகும். இதனையடுத்து வாகனத்தை கைப்பற்றி மருவத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.