Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப் 2,2ஏ தேர்வினை 4,393 பேர் எழுதினர்

அரியலூர், நவ.2: அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II, IIA) முதல்நிலைத் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தினை மாவட்ட கலெக்டர் மிருணாளினி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு முதல்நிலைத் தேர்வுகள் நேற்று அரியலூர் வட்டத்தில் 10 தேர்வு மையங்கள் மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில் 07 தேர்வு மையங்கள் என இரண்டு வட்டங்களில் மொத்தம் 17 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

இத்தேர்வு எழுத மொத்தம் 5,359 தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 255 தேர்வர்களும், அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 247 தேர்வர்களும், நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 249 தேர்வர்களும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 244 தேர்வர்களும், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 740 தேர்வர்களும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 241 தேர்வர்களும், அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் 255 தேர்வர்களும், நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 291 தேர்வர்களும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 254 தேர்வர்களும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 245 தேர்வர்களும், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 498 தேர்வர்களும், பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 350 தேர்வர்களும், பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 310 தேர்வர்களும், மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரியில் 214 தேர்வர்களும் என ஆகமொத்தம் 4393 தேர்வர்கள் இத்தேர்வு எழுத வருகை புரிந்தனர். மேலும் 966 தேர்வர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை.

மேலும், தேர்வினைக் கண்காணிப்பதற்காக, துணை ஆட்சியர் நிலையில் 02 பறக்கும் படை அலுவலர்கள், வட்டாட்சியர் நிலையில் 06 இயங்கு குழுக்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் 17 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 19 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் சிரமமின்றித் தேர்வெழுதும் வகையில் தரைத்தளத்தில் தேர்வெழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று வர தேவையான பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.