Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தென்னை சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்

அரியலூர்,நவ.2: தென்னை சாகுபடியில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.அரியலூர் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் மொத்த விற்பனையில் காய் ஒன்று ரூபாய் பத்திலிருந்து குறைந்து ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேங்காய் பறிப்பதற்கான போதிய, ஆட்கள் இல்லாத நிலையில் கூலியும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தென்னை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னை வளர்ப்பில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர்.தென்னையில் கூடுதல் மகசூல் பெற, நுண்ணூட்ட கலவை உரம் இடுதல் அவசியம். தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தில், துத்தநாகசத்து (5 சதவீதம்), இரும்புச்சத்து (3.80), மேங்கனீசு சத்து (4.8), போரான் (1.6) மற்றும் தாமிரசத்து (0.05) என்ற விகிதத்தில் உள்ளது. இரும்புச்சத்தானது, தென்னை இலையில் பச்சையம் உருவாவதற்கு நடக்கும் வினையிலும், பயிர் வளர்சிதை மாற்றங்களில் ஈடுபடும் பல்வேறு என்சைம்கள் எனப்படும் நொதிப்பான்கள் உருவாவதிலும், அதனை இயக்குவதிலும் உறுதுணை புரிகின்றது.