Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் முதியோர் தின விழா

பெரம்பலூர், அக். 2: பெரம்பலூரில் சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சர்வதேச முதியோர் தின விழா மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 7 முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்கள் மற்றும் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தந்தை ரோவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் ஒன்றிணைந்து, துறை மங்கலத்தில் செயல்பட்டு வரும் தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் உற்சாகத்துடன் பாடியும், நடனமாடியும், கவிதை சொல்லியும் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட சமூக நலஅலுவலர் புவனேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, பெரம்பலூர் தாசில்தார் பழனிசெல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.