ஜெயங்கொண்டம்,அக்.2: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகர் கோயில், வேம்புகுடி, முத்துசேர்வமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியார்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூர், வெண்ணங்குழி, வாழ குட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக் கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
+
Advertisement


