Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் இன்று 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

பெரம்பலூர், அக். 2: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், பொது மக்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம் மற்றும் தூய்மைபாரத இயக்க (ஊரகம்) திட்டங்களின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.