ராசிபுரம், ஏப்.3: ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ராசிபுரத்திலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில், காக்காவேரி மற்றும் சீராப்பள்ளி பகுதிகளில் இருவழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், கவுண்டம்பாளையம் பகுதியில் இடைவழிப் பாதையினை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ஆகியவை ₹5.71 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் கதிரேஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உதவிக்கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவிப் பொறியாளர் மணிகண்டன், நாமக்கல் தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement


