குலசேகரம், அக்.16: திருவட்டாரை அடுத்த முளவிளை பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் ஆலயத்துக்கு உட்பட்ட, புனித அந்தோணியார் சிற்றாலயமும் உள்ளது. இங்கு குருசடியும் அமைந்து உள்ளது. இந்த குருசடிக்கு வெளியே காணிக்கை பெட்டி உண்டு. இந்த காணிக்கை பெட்டியை வாரந்தோறும் திறந்து, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை காணிக்கை பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தினர். காணிக்கை பெட்டியின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த மற்றொரு கதவை திறக்க முடியவில்ைல. இதனால் காணிக்கை பணம் தப்பியது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.


