Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசின் வேலை வாய்ப்பு வலைத்தளத்தில் ஓவேலி பேரூராட்சி பெயரை மீண்டும் சேர்க்க நடவடிக்கை

கூடலூர், ஆக 18: அரசின் வேலை வாய்ப்பு வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சி பெயரை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வேலை வாய்ப்பு பதிவு வலைத்தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி பகுதி பதிவுகள் திடீரென நீக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. நீக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சி தகவல் பகுதியை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் ஆகியோருக்கு ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து கடந்த 15ம் தேதி தினகரன் நாளிதழில் செய்து வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று கூடலூர் கோட்டாட்சியர் அலுவலக வேலை வாய்ப்பு அலுவலகம் தரப்பில், நீக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சி பகுதி பதிவுகள் வரும் 3 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்புகளை பாதிக்கும் இது போன்ற குளறுபடிகள் வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்கவும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஓவேலி பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.