ஊட்டி,ஆக.10: ஊட்டி தீட்டுக்கல் சந்திப்பில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி தீட்டுக்கல் சாலை சந்திப்பில் இருந்து கர்நாடகா பூங்கா வழியாக முள்ளிக்கொரை பகுதிக்குச் செல்ல சாலை உள்ளது. இத்தலாரில் இருந்து வரும் பொதுமக்கள் ஊட்டி நகருக்குள் செல்லாமல் பிங்கர்போஸ்ட் மற்றும் கூடலூர் செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் கர்நாடகா பூங்கா அமைந்துள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனிடையே பர்ன்ஹில் பகுதியில் இருந்து தீட்டுக்கல் வழியாக புறவழிசாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிக்கொரை சாலை சந்திப்பு அருகே உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்கப்பட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. இதனால் முள்ளிக்கொரை செல்லும் இணைப்புச் சாலை சந்திப்பு பகுதி பராமரிப்பின்றிப் பெரிய அளவிலான பள்ளங்களுடன் காணப்படுகிறது.
+
Advertisement




