Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு முறை வரன்முறை சட்டத்தின் கீழ் விதி மீறிய கட்டிடங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்

ஊட்டி,செப்.29: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விதி மீறிய கட்டிடங்களுக்கு ஒரு முறை வரன்முறை சட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வாணிஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணைத் தலைவர் ரவிக்குமார் பேசியதாவது:

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 934 கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கட்டிட உரிமையாளர்கள் கடந்த 1993ம் ஆண்டு முதல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மாஸ்டர் பிளாண்ட் சட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வந்தது முதல் பல்வேறு தரப்பினரும் ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ஒரு முறை வரன்முறை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு விதிவிலக்கு அளித்து அனைத்து கட்டிடங்களையும் வரன்முறை செய்ய வேண்டும். அதேபோல் ஊட்டி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி அனுமதி வழங்கும் திட்டத்தினை மீண்டும் கொண்டு வர வேண்டும். குப்பைகளை முறையாக தரம் பிரித்து பெற்றுக் கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தமாக காட்டேஜ் மற்றும் ஓட்டல்களில் குப்பைகளை எடுக்காமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை பிரித்து வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜார்ஜ் (திமுக.,): ஊட்டி சர்ச்சில் பகுதிக்கு செல்லும் நடைபாதைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். ஊட்டி நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் 50க்கும் மேற்பட்ட ஆவின் பூத்துகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை நகராட்சி நிர்வாகம் எடுத்து ஏலம் விட வேண்டும்.ஆவின் நிர்வாகம் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். தீட்டுக்கல் குப்பை கொட்டும் பகுதியில் பார்சன்ஸ் வேலி குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேசிபி வாடகை அதிகமாக வந்துள்ளது இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டிப்பர் லாரிகளை வாங்க வேண்டும். பேண்டு லைன் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். நகராட்சி மார்க்கெட் கடைகளை குறைந்த வாடகையில் மீண்டும் வியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை வாடகைக்கு விட வேண்டும்.

முஸ்தபா (திமுக.,) : பாம்பே கேஸில் சாலையை சீரமைக்க வேண்டும். வார்டு சபா கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றி பணிகளை முடித்து தர வேண்டும். எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் முடிந்த பின்னரே ஏலம் விட வேண்டும்.

தம்பி இஸ்மாயில் (திமுக.,): எனது வார்டுக்குட்பட்ட எஇஜி., காலனியில் மழை நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். பிங்கர் போஸ்ட் முதல் காந்தல் மருத்துவமனை வரை கழிவுநீர் கால்வாய் சாலையில் ஓடுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி நகராட்சியில் தூய்மை மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஜேசிபி., மற்றும் டிப்பர் லாரிகள் போன்று எதுவும் கிடையாது. இதனால் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. ஜேசிபி., இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி (திமுக.,): எல்கில் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சீரமைக்க வேண்டும். எட்டு நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. குடிநீர் பிரச்னையை சீரமைத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்கில் பகுதியில் உள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுதாகிர் (திமுக.,): தற்போது குப்பை எடுப்பவர்களுக்கு மீண்டும் டெண்டர் கொடுத்தால் போராட்டம் நடத்தப்படும். எந்த வார்டிலும் முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப் படுவதில்லை. நகராட்சி சார்பில் கட்டப்பட்ட வரும் கல்யாண மண்டபத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

கீதா (திமுக.,): முக்கோணத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் குதிரைகள் கூட்டமாக நிற்பதால் குழந்தைகள் பாதிக்கின்றன.அப்பகுதியில் குதிரைகள் கட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகமணி (திமுக.,): நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உடனடியாக டெண்டர் விட வேண்டும். பட்பயர் பகுதியில் உள்ள கால்வாய்கள் சீரமைக்க வேண்டும்.

செல்வராஜ் (திமுக.,): நொண்டிமேடு பகுதியில் தெரு விளக்குகள் எரியாத நிலையில்,வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்க வேண்டும். நடைபாதைகள் சீரமைத்து கொடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் (காங்.,) வார்டிற்கு குறைந்தபட்சம் இரு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டிற்குட்பட்ட கிரீன்பீல்டு பகுதியில் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. எனவே, கழிவு நீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.