Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரண்டாம் சீசனுக்காக தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணி துவக்கம்

ஊட்டி,செப்.29: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் ெதாட்டிகள் அடுக்கும் பணிகள் துவங்கியது. ஆண்டு தோறும் இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நடக்கும். இரண்டாம் சீசன் போது வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல் சீசன் போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் ெதாட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்படும். இரண்டாம் சீசன் போது, 25 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

இம்முறை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, டெய்சி, டேலியா, சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கப்படும்.மேலும், பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இம்முறை கடந்த மூன்று மாதங்களாக மழை குறைந்தது. இதனால், குறித்த சமயத்தில் மலர்கள் பூக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கினற்ன.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக, தற்போது மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்கள் இப்பணிகள் முடிந்தவுடன், சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து மாடங்களில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் புல் மைதானங்களில் ெதாட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்க்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். தொட்டிகள் அடுக்கும் பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.