Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிரஷ் காய்கறிகளை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி,செப்.21: ஊட்டியில் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் பிரஷ்ஷான மலை காய்கறிகளை வாங்கி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஊட்டியில் தற்போது 2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அதற்கேற்றார் போல் குளு குளு காலநிலை நிலவி வருகிறது.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரங்களில் வைத்து பூச்செடிகள், காய்கறிகள், பழவகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். விலை குறைவாகவும், பிரஷ்ஷாகவும் கிடைப்பதால் இவற்றை வாங்கிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கடைகளில் வாங்குவதை காட்டிலும் காய்கறிகள் விளையும் இடத்திலேயே வாங்குவதால் பிரஷ்ஷாகவும், விலை குறைவாகவும் கிடைக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு திருப்தியான அளவிற்கு காய்கறிகளும் கிடைக்கிறது, என்றனர்.