Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பட்டாசுக் கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி,செப்.21: நீலகிரி மாவட்டத்தில், தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும்,விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வரும் 8.11.2026ம் தேதி அன்று கொண்டாடப்பவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிப்பொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் பிரிவு-84ன் படி தற்காலிக பட்டாசு உரிமம் கோரும், விண்ணப்பங்களை இ-சேவை (https://www.tnesevai.tn.gov.in ) மையங்கள் மூலம் அக்டோபர் 10ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், மனை வரைபடம்,கடை அமைக்கவிருக்கும் இடத்தின் வரைபடம், தற்காலிக பட்டாசு கடை அமைக்கவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள், விண்ணப்பதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் எனில்,அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல்,வாடகை இடம் எனில்,வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.100க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம் பெற வேண்டும்.

குத்தகை இடம் எனில்,குத்தகைப்பதிவு செய்யப்பட்ட ஆவணம்,விண்ணப்பதாரரின் முகவரி சான்று (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.முந்தைய ஆண்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிருப்பின் அதன் நகல், உரிய, அரசு கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.600, IFHRMS இணைய தளத்தின் வாயிலாக செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு இணைக்கப்பட வேண்டும்.

சுய உறுதி மொழிபத்திரம்,உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்றப்பட்ட பல்வகை வரி ரசீது நகல்கள் ஆகியவற்றுடன் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்படி விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதெனில், தற்காலிக பட்டாசு உரிமத்தினையும், நிராகரிப்பட்டது எனில் நிராகரிக்கப்பட்டதற்கான ஆணையினையும் விண்ணப்பதாரர் இ-சேவை மைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்காலிக பட்டாசுகடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தினை தற்காலிக பட்டாசு கடை அமைக்க தேர்வு செய்து, விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாடிட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.