Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இதமான காலநிலையை அனுபவிக்க தொட்டபெட்டாவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி, செப். 21: விடுமுறை நாளான நேற்று இதமான காலநிலையை அனுபவிக்க தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டியில் தற்போது 2வது சீசன் நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தேனிலவு தம்பதியரின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது. அதற்கேற்ப மழையின்றி பனிமூட்டத்துடன் இதமான கால நிலை நிலவியதால் அதனை அனுபவித்த படியே சுற்றி பார்த்தனர்.

குறிப்பாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சுமார் 8 கிமீ., தொலைவில் அமைந்துள்ள தமிழகத்தின் மிக உயரமான மலை சிகரமான தொட்டாபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.ஆனால் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் உயரமான தொட்டபெட்டாவில் இருந்து இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அவ்வப்போது தொட்டபெட்டா சாலையில் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது. இதேபோல் ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி, ஊசிமலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் காணப்பட்டது.