ஊட்டி, ஆக. 20: ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை மஞ்சள் போர்டு பகுதியில் புதிய நிழற்
குடை அமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எந்த ஒரு அவசர மற்றும் அன்றாட தேவைகளுக்கு ஊட்டி நகருக்கே வர வேண்டும். சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு தற்போது மினி பஸ்கள் மட்டுமே சென்று வருகின்றன. பெரும்பாலான மக்கள் மஞ்சள் போர்டு பகுதிக்கு வந்து, அங்கிருந்து அரசு பஸ்களின் மூலம் ஊட்டி நகரக்கு வந்துச் செல்கின்றனர்.
ஆனால், மஞ்சள் போர்டு பகுதியில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், காற்று மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் சாலைகளிலேயே பஸ்சிற்காக வேகு நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே, இந்த பகுதி பொதுமக்கள் நலன் கருதி மஞ்சள் போர்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



